ஆத்தே !
சிட்டுக் குருவிய காணோம் !
சீனா தானா வீட்டு திண்ணையை காணோம் !
ஆத்தே !
ஆலமரத்தையும் காணோம் !
அதிலிருந்த ஆயிரம் பறவையும் காணோம் !
ஆத்தே !
அடை காக்கும் தாய் கோழிய காணோம் !
அக்கா குறிவியையும் காணோம் !
ஆத்தே !
பன மரத்தையும் காணோம் !
பனங்கொத்தி பறவையும் காணோம் !
ஆத்தே !
எருத காணோம் !
ஏர் மாட்டையும் காணோம் !
ஏர் உழ ஆளையும் காணோம் !
ஆத்தே !
தட்டாம் பயிரையும் காணோம் !
தட்டம் பூச்சியையும் காணோம் !
ஆத்தே !
கொக்க காணோம் ! _ அது
கொத்தி தின்ன
கெளித்தி மீனையும் காணோம் !
ஆத்தே !
என்புள்ள கேட்டா
எத காமிப்பேன்
ஆத்தே !
நம்ம வம்சமே என்னோட முடியுதா !
நான் என்ன சொல்ல என் புள்ள கிட்ட
நிலம்
என்னுடைய அடையாளம் .
வயல்
நம்ம வம்சத்தின் அடையாளம்
பொண்டாட்டி போனா
வாழ்க்கை போச்சி
நிலம் போனா
உன் வம்சமே போச்சி
அட ப்ரோக்கர் பயலே
நீ விக்க நினைக்கிறது
நம்ம நிலம் இல்ல
உன் அன்னையை !
Tuesday, January 31, 2012
Subscribe to:
Posts (Atom)