Thursday, January 21, 2016



பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் ​



​ ​ _ மோசிகீரனார் , குறுந்தொகை _ 84.



"பெண்களின் மன மற்றும் உடல் நிலையை



காதலுக்கு முன் , காதலுக்கு பின் என்று



சங்கப் புலவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் ...."

பாடல் விளக்கம் :

காதலுக்கு முன் :

இடி இடித்தாலும் , பெரும் சத்தம் கேட்டாலும்

தாவி ஓடி தன் அன்னையரை கட்டி பிடித்துக் கொள்வர் , நாட்டில் இன்றும் நிறைய பெண்கள் அப்படிதான் .

இங்கு மகன்கள் தந்தையுடன் உறங்குவதில்லை ஒரு வயதிற்கு பிறகு ...

ஆனால் பெண்கள் அன்னையோடு உறங்கும் குணமுடையவர்கள் ...

அப்படி தூங்கும் பொது அன்னை தூக்க கலக்கத்தில் தன் கையை மகளின் மேல் போட்டால்

அதை அன்போடு கட்டி பிடித்து தூங்குவார்கள் "காதலுக்கு முன் பெண்கள்"

காதலுக்கு பின் பெண்கள் :

காதலன் என்ற கள்வன் வந்து

இருக அணைக்கும் சந்தோசத்தை உள்ளமும் ஊடலும் உணந்த பிறகு

அம்மாவின் தொடுதல் அந்நியமாகிவிடுகிறது

அப்படித்தான் இந்த பாடலில் இந்த அம்மா அன்பு மேலூற

மகளை அணைக்க விரும்பி திரும்பினால் அவ்வளவுதான்

எரிந்து விழுகிறாள் மகள்

"விடும்மா விடும்மா வியர்க்குதுல்ல "

மார்கழி மாதம் வியர்க்குதான் பாருங்களேன்

அழகு

உன் அழகை ரசிக்கும் காதலியாகவேண்டாம்...! உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!!!