Thursday, January 21, 2016



பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் ​



​ ​ _ மோசிகீரனார் , குறுந்தொகை _ 84.



"பெண்களின் மன மற்றும் உடல் நிலையை



காதலுக்கு முன் , காதலுக்கு பின் என்று



சங்கப் புலவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் ...."

பாடல் விளக்கம் :

காதலுக்கு முன் :

இடி இடித்தாலும் , பெரும் சத்தம் கேட்டாலும்

தாவி ஓடி தன் அன்னையரை கட்டி பிடித்துக் கொள்வர் , நாட்டில் இன்றும் நிறைய பெண்கள் அப்படிதான் .

இங்கு மகன்கள் தந்தையுடன் உறங்குவதில்லை ஒரு வயதிற்கு பிறகு ...

ஆனால் பெண்கள் அன்னையோடு உறங்கும் குணமுடையவர்கள் ...

அப்படி தூங்கும் பொது அன்னை தூக்க கலக்கத்தில் தன் கையை மகளின் மேல் போட்டால்

அதை அன்போடு கட்டி பிடித்து தூங்குவார்கள் "காதலுக்கு முன் பெண்கள்"

காதலுக்கு பின் பெண்கள் :

காதலன் என்ற கள்வன் வந்து

இருக அணைக்கும் சந்தோசத்தை உள்ளமும் ஊடலும் உணந்த பிறகு

அம்மாவின் தொடுதல் அந்நியமாகிவிடுகிறது

அப்படித்தான் இந்த பாடலில் இந்த அம்மா அன்பு மேலூற

மகளை அணைக்க விரும்பி திரும்பினால் அவ்வளவுதான்

எரிந்து விழுகிறாள் மகள்

"விடும்மா விடும்மா வியர்க்குதுல்ல "

மார்கழி மாதம் வியர்க்குதான் பாருங்களேன்

அழகு

உன் அழகை ரசிக்கும் காதலியாகவேண்டாம்...! உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!!!

Tuesday, January 31, 2012

ஆத்தே !

ஆத்தே !

சிட்டுக் குருவிய காணோம் !
சீனா தானா வீட்டு திண்ணையை காணோம் !

ஆத்தே !

ஆலமரத்தையும் காணோம் !
அதிலிருந்த ஆயிரம் பறவையும் காணோம் !

ஆத்தே !

அடை காக்கும் தாய் கோழிய காணோம் !
அக்கா குறிவியையும் காணோம் !

ஆத்தே !

பன மரத்தையும் காணோம் !
பனங்கொத்தி பறவையும் காணோம் !

ஆத்தே !

எருத காணோம் !
ஏர் மாட்டையும் காணோம் !
ஏர் உழ ஆளையும் காணோம் !

ஆத்தே !

தட்டாம் பயிரையும் காணோம் !
தட்டம் பூச்சியையும் காணோம் !


ஆத்தே !

கொக்க காணோம் ! _ அது
கொத்தி தின்ன
கெளித்தி மீனையும் காணோம் !

ஆத்தே !

என்புள்ள கேட்டா
எத காமிப்பேன்

ஆத்தே !

நம்ம வம்சமே என்னோட முடியுதா !
நான் என்ன சொல்ல என் புள்ள கிட்ட

நிலம்
என்னுடைய அடையாளம் .
வயல்
நம்ம வம்சத்தின் அடையாளம்

பொண்டாட்டி போனா
வாழ்க்கை போச்சி

நிலம் போனா
உன் வம்சமே போச்சி

அட ப்ரோக்கர் பயலே
நீ விக்க நினைக்கிறது

நம்ம நிலம் இல்ல

உன் அன்னையை !

Tuesday, February 01, 2011

இளமைகல்லரை

இளமைகல்லரை(காவியம்):நான் என் நண்பர்களின் உந்துதலால் இந்த காவியத்தை இயற்ற ஆரம்பித்திருக்கிறேன்.மற்ற விசயங்கள் என்னுடய பதிப்பிற்கு பிறகு.. அன்புடன்உங்கள் விஸ்டம் வேல்.......

Wednesday, January 19, 2011

வாடாமலர்

யார் இந்த வாடாமலர் ?
நகர்ந்தும் ,சிரித்தும் விளையாடுகிறதே !
பதில் சொல்ல ஆசைதான் ..நீதானென்று
புரியுமா அந்த வண்ணத்துப்பூச்சிக்கு

_Wisdom Vel

மருதாணி

உன் காலின் மருதாணியை பார்த்து
நீ வியக்கிறாய்,மலைக்கிறாய்,சிரிக்கிறாய் ,
நான் எப்படி உன்னிடம் சொல்ல _அது
உன்னை பார்த்து வியிக்கிறது என்று

_Wisdom Vel

Tuesday, January 18, 2011

கூந்தல்


கருமேகங்களை உன் கருவிழிகளால்
கண்டு ஏனடி ஆனந்தபடுகிறாய்?
அடடே அதோ பார் அக்கருமேகங்கள்
உன் கூந்தலை கண்டு பொறாமை கொண்டு
களைந்து ஓடுவதை ............


-Wisdom Vel

Monday, January 17, 2011

முத்தம்

பயப்படாமல்
பைய படாமல்
முத்தமிடு
உன் செவ்விதழ் தீண்டி
இந்த மரத்தமிழன் உடம்பு சிவக்கட்டும்

-Wisdom Vel

Friday, May 21, 2010

கொன்று விட்டு போ !


கொன்று விட்டு போ
என்னை வேண்டாம் என்னும் உன் மனதையில்லை
என்னை
கொன்று விட்டு போ

!